என் மலர்
இந்தியா
X
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: கண்டர்பால் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் உமர் அப்துல்லா
Byமாலை மலர்4 Sept 2024 3:33 PM IST
- ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடைபெற இருக்கிறது.
- செப்டம்பர் 18-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஸ்ரீநகர்:
மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25-ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ம் தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்.
இந்நிலையில், கண்டர்பால் தொகுதியில் தேசிய மாநாடு கட்சி சார்பில் உமர் அப்துல்லா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story
×
X