search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
    X

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா மக்களவையில் தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

    • 543 மக்களவை தொகுதிகள், 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன
    • மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.

    இந்தியாவில் மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தி முடித்திட மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை முன்மொழிந்தது.

    மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தச் சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்த குழு ஒரு நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதாவைக் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய கூட்டத் தொடரிலேயே பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று [டிசம்பர் 17] ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். ஆரம்ப நிலையில் இருந்தே இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    மசோதா தற்போது மக்களவையில் தாக்கல் ஆன நிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட வாய்ப்புள்ளது.

    Next Story
    ×