என் மலர்
இந்தியா
மக்களவையில் இன்று தாக்கலாகும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா
- ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வந்தது.
- நேற்று இந்த மசோதா தாக்கல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது.
மக்களவையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றுகிறார். மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சி என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது. அதன்படி நேற்று இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக இந்த வார இறுதி நாட்களில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி நேற்று இந்த மசோதா தாக்கல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மக்களவையில் பகல் 12 மணிக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்து உரையாற்ற இருக்கிறார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பும் பட்சத்தில் அதனை கூட்டுக்குழு விசாரணைக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்றைய பாராளுமன்ற நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு கொறாடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.