என் மலர்
இந்தியா

X
பொருளாதார தோல்வி, பணவீக்கம், வேலையின்மை மட்டுமே மோடி அரசின் மொத்த உற்பத்தி: ராகுல் காந்தி தாக்கு
By
மாலை மலர்3 March 2025 6:14 PM IST (Updated: 3 March 2025 6:15 PM IST)

- பொருளாதார தோல்வி, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் மற்றும் பொய்கள் மட்டுமே மொத்த உற்பத்தி.
- அநீதியான வரிவிதிப்பை நீக்குங்கள், ஏகபோகத்தை ஒழிக்கவும், வங்கிகளுக்கான கதவுகளைத் திறக்கவும், திறமையாளர்களுக்கு உரிமைகளை வழங்கவும்.
காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்திaல் கூறியிருப்பதாவது:-
மோடி அரசின் கீழ் மொத்தமாக ஏதாவது உற்பத்தி செய்யப்பட்டிருந்தால் அது பொருளாதார தோல்வி, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் மற்றும் பொய்கள் மட்டுமே.
அநீதியான வரிவிதிப்பை நீக்குங்கள், ஏகபோகத்தை ஒழிக்கவும், வங்கிகளுக்கான கதவுகளைத் திறக்கவும், திறமையாளர்களுக்கு உரிமைகளை வழங்கவும்... அப்போதுதான் வலுவான இந்தியா, பொருளாதாரம், வேலைவாய்ப்பை கட்டமுடியும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Next Story
×
X