search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வக்பு மசோதா தொடர்பான கூட்டுக்குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு- எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
    X

    வக்பு மசோதா தொடர்பான கூட்டுக்குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு- எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

    • கூட்டுக்குழுவின் அறிக்கை ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.
    • மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

    வக்பு மசோதா தொடர்பான கூட்டுக்குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதைதொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    கூட்டுக்குழுவின் அறிக்கை ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய வருமான வரி மசோதாவை நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரந்துரைத்தார்.

    வருமான வரி சட்டமானது வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    நிதி அமைச்சரின் பரிந்துரையை தொடர்ந்து நிலைக்குழுவுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மக்களவை மார்ச் 10ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×