என் மலர்
இந்தியா
X
ராமர் கோவில் விவகாரத்தில் இரட்டை வேடம்: ராகுல் காந்தியை சாடிய பினராயி விஜயன்
Byமாலை மலர்26 Feb 2024 11:50 AM IST
- காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் நாளை இருப்பார்களா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.
- கோவிலுக்குச் செல்வது, பஜனைகள் பாடுவது ஆகியவை ஒவொருவரது தனிப்பட்ட விருப்பங்கள் என்றார்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கண்ணூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி பினராயி விஜயன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் நாளை இருப்பார்களா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி சென்றார். அதேநாளில் கோவிலில் தியானம் செய்ய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி போராட்டம் நடத்தினார்.
கோவிலுக்குச் செல்வது, பிரார்த்தனை செய்வது, பஜனைகள் பாடுவது ஆகியவை ஒருவரது தனிப்பட்ட விருப்பங்கள். நாங்கள் யாரும் அதை எதிர்க்கவில்லை.
ஆனால் அவர்கள் பார்வையிடத் தேர்ந்தெடுத்த தேதி மற்றும் நேரம் மற்றும் இதன்மூலம் அவர்கள் தெரிவிக்க முயற்சிக்கும் செய்தியில் தான் பிரச்சனை உள்ளது என குறிப்பிட்டார்.
Next Story
×
X