என் மலர்
இந்தியா
X
மோபா சர்வதேச விமான நிலையம் - பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Byமாலை மலர்11 Dec 2022 4:06 PM IST
- வடக்கு கோவா மோபாவில் சர்வதேச விமான நிலையம் ரூ.2,870 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
- இரவில் விமானம் நிறுத்தும் வசதி, சரக்கு முனையம் ஆகியவை இங்கு புதிதாக அமைகின்றன.
பனாஜி:
கோவாவில் தற்போதுள்ள டபோலிம் விமான நிலையம் ஒரு வருடத்தில் 85 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.
இந்நிலையில், வடக்கு கோவாவின் மோபாவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மோபா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
ரூ. 2 870 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில், இரவில் விமானம் நிறுத்தும் வசதி, சரக்கு முனையம் ஆகியவை புதிதாக அமைகின்றன
முதல்கட்டமாக ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையம், முழு திட்டமும் நிறைவடைந்த பிறகு ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை கையாளும்.
Next Story
×
X