என் மலர்
இந்தியா

X
பிரதமர் மோடி
இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி - பிரதமர் மோடி
By
மாலை மலர்26 Jun 2022 7:54 PM IST

- திரிபுராவில் முதல் மந்திரி மாணிக் சஹா தாம் போட்டியிட்ட பர்தோவாலி டவுன் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றார்.
- பஞ்சாப்பில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி சங்ரூர் பாராளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
3 பாராளுமன்றம், 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தர பிரதேசத்தில் 2 பாராளுமன்ற தொகுதிகளிலும், திரிபுராவில் 3 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது.
இந்நிலையில், பாராளுமன்ற, சட்டசபை தேர்தலில் பாஜகவை ஆதரித்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:
ஆந்திரா, ஜார்க்கண்ட், டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் திரிபுராவில் பா.ஜ.க.வை ஆதரித்த வாக்காளர்களுக்கு நன்றி.
மக்களின் நலனுக்காக பா.ஜ.க. தொடர்ந்து பணியாற்றும் என பதிவிட்டுள்ளார்.
Next Story
×
X