என் மலர்
இந்தியா
VIDEO: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு மோடி - அமித் ஷா நேரில் மரியாதை
- மயங்கிய நிலையில் இருந்த அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
- இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.
ஏற்கனவே இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்து இருந்த மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மயங்கிய நிலையில் இருந்த அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு 9.51 மணிக்கு மன்மோகன் சிங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.
இந்நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய அரசு அவரது மறைவுக்கு 7 நாட்கள் தூக்கம் அனுசரிக்கிறது. மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே டெல்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்தில் அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இறுதி அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
#WATCH | Delhi | PM Narendra Modi arrives at the residence of late former PM Dr Manmohan Singh pic.twitter.com/9CmaF0gAgG
— ANI (@ANI) December 27, 2024
#WATCH | Delhi | PM Narendra Modi pays last respects to late former PM Dr Manmohan Singh and offers condolences to his family pic.twitter.com/7vn1PB1Xdj
— ANI (@ANI) December 27, 2024
அவருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஜேபி நட்டா ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.
#WATCH | Union Minister JP Nadda pays final respect to former PM Dr Manmohan Singh, at latter's residence in Delhi. pic.twitter.com/65RoCUTEgs
— ANI (@ANI) December 27, 2024
#WATCH | Delhi | Union Home Minister Amit Shah pays last respects to former PM Dr Manmohan Singh who passed away last night(Source: DD) pic.twitter.com/nX8rnb1Yu6
— ANI (@ANI) December 27, 2024