என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![குடும்பம்தான் முதன்மை என்பது காங்கிரசின் முன்னுரிமை; தேசம்தான் முதன்மை என்பதுதான் பாஜக-வின் முன்னுரிமை: பிரதமர் மோடி குடும்பம்தான் முதன்மை என்பது காங்கிரசின் முன்னுரிமை; தேசம்தான் முதன்மை என்பதுதான் பாஜக-வின் முன்னுரிமை: பிரதமர் மோடி](https://media.maalaimalar.com/h-upload/2025/02/06/9005812-modi06022025.webp)
குடும்பம்தான் முதன்மை என்பது காங்கிரசின் முன்னுரிமை; தேசம்தான் முதன்மை என்பதுதான் பாஜக-வின் முன்னுரிமை: பிரதமர் மோடி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அனைவருக்குமான வளர்ச்சி என்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
- தேசமே முதன்மை என்பதுதான் பாஜகவின் முன்னுரிமை. மக்கள் எங்கள் வளர்ச்சி மாடலை ஆதரித்துள்ளனர்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளில் கூட்டுக் கூட்டத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்திற்காக பிப்ரவரி 3-ந்தேதி பாராளுமன்றம் கூடியது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக மாநிலங்களவையில் இன்று மாலை பிரதமர் பேசினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
* நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை சிறப்பாக அமைந்தது.
* 'சப்கா சாத், சப்கா விகாஸ்' அனைவரின் பொறுப்பு. காங்கிரசிடமிருந்து 'சப்கா சாத், சப்கா விகாஸ்' எதிர்பார்ப்பது மிகப்பெரிய தவறு. அது அவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. மேலும் அது அவர்களின் திட்டத்திற்கும் பொருந்தாது. ஏனெனில் முழு கட்சியும் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
* அனைவருக்குமான வளர்ச்சி என்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
* குடும்பம்தான் முதன்மையான என்பது காங்கிரஸ் கட்சியின் முன்னுரிமை. அதனுடைய கொள்கைகள் குடும்பத்தை சுற்றியே இருக்கும்.
* தேசமே முதன்மை என்பதுதான் பாஜக-வின் முன்னுரிமை. மக்கள் எங்கள் வளர்ச்சி மாடலை ஆதரித்துள்ளனர்.
* காங்கிரஸ் மாடல் பொய், குடும்ப அரசியல், திருப்திப்படுத்தும் அரசியல், மோசடி கலந்தது.
* தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி மாடல் திருப்பிப்படுத்தும் அரசியல் (appeasement- அரசியல் ஆதாயத்திற்காக ஒரு செயலை செயல்படுத்துதல்) அல்ல. மக்கள் அனைவரும் திருப்திப்படுத்தும் அரசியல் அல்ல.
* தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக எஸ்.சி., எஸ்.டி. சட்டங்களை வலுப்படுத்தினோம்.
* மக்களின் நலனுக்காக வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதே எங்கள் முயற்சி.
* இன்று, சமூகத்தில் சாதி விஷத்தைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல ஆண்டுகளாக, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஓபிசி எம்.பி.க்கள் ஓபிசி குழுவிற்கு அரசியலமைப்பு அந்தஸ்து கேட்டு வந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, ஏனெனில் அது அவர்களின் (காங்கிரஸ்) அரசியலுக்குப் பொருந்தாமல் இருந்ததிருக்கலாம். ஆனால் நாங்கள் இந்தக் குழுவிற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கினோம்.
* 2014 க்குப் பிறகு, இந்தியா ஒரு மாற்று நிர்வாக மாடலை பெற்றது. இந்த மாடல் திருப்திப்படுத்தும் அரசியலில் (அரசியல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு ஒரு செயலை செய்தல்) கவனம் செலுத்தவில்லை. மாறாக மக்களை திருப்திப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
* டாக்டர் சாகேப் அம்பேத்கர் மீது காங்கிரஸ் எவ்வளவு கோபத்தையும் வெறுப்பையும் கொண்டிருந்தது என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பாபா சாகேப்பை பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவராக ஒருபோதும் கருதவில்லை. ஆனால் இன்று கட்டாயத்தின் காரணமாக 'ஜெய் பீம்' என்ற கோஷத்தை எழுப்ப வேண்டியிருக்கிறது.
* புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எடுக்கப்பட்ட முதல் முடிவு பெண்கள் அதிகாரமளிப்பதை கௌரவிப்பதற்கானதாகும்.
* எங்கள் அரசாங்கம் திறன் மேம்பாடு, நிதி உள்ளடக்கம் மற்றும் தொழில்மயமாக்கலில் கவனம் செலுத்தியது.
* பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் மூலம் பாபாசாகேப் அம்பேத்கரின் கனவுகளை நாம் நனவாக்கி கொண்டிருக்கிறோம்.
* என்னுடைய அரசு புதிய நடுத்தர வர்க்கத்தினருக்காக உறுதியாக நிற்கிறது. அவர்களின் திறன்களை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.
* நடுத்தர வர்க்கத்தினர் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர்; அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சக்தி அளிக்கும்.
* நாங்கள் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.
* திறமையான விளையாட்டு வீரர்களை ஆதரிக்க, அரசு பல முனைகளில் பணியாற்றியுள்ளது; விளையாட்டு உள்கட்டமைப்புக்கு வலுவான நிதி ஆதரவை உறுதி செய்துள்ளது.
* ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க எங்கள் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட பணிகள் இதற்கு முன் ஒருபோதும் செய்யப்படவில்லை.