search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2047-ல் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே இலக்கு: பிரதமர் மோடி
    X

    2047-ல் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே இலக்கு: பிரதமர் மோடி

    • நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
    • சீர்திருத்தம், செயல், மாற்றம் என்பதே எங்களின் மிக முக்கியமான இலக்கு.

    2025-26 நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் தொடக்க நாளில் பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இரு அவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

    பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னர் லட்சுமி தேவியை வழிபடுகிறேன்.

    * லட்சுமி தேவி ஞானம் வளத்தை வழங்க வல்லவர்.

    * 2047-ல் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே இலக்கு.

    * நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

    * புதுமை மற்றும் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் பணியாற்றுகிறோம்.

    * வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்கள் நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.

    * சீர்திருத்தம், செயல், மாற்றம் என்பதே எங்களின் மிக முக்கியமான இலக்கு.

    * பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×