search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய எம்.பி.க்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி
    X

    புதிய எம்.பி.க்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி

    • மக்கள் 3-வது முறையாக வாய்ப்பளித்து உள்ளதால் முன்பைவிட 3 மடங்கு உற்சாகத்துடன் நாம் செயல்பட வேண்டும்.
    • 140 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் புதிய எம்.பி.க்கள் செயல்பட வேண்டும்.

    புதுடெல்லி:

    18-வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.

    புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஏதுவாக தற்காலிக சபாநாயகராக பா.ஜனதாவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தற்காலிக சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மஹ்தாபுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு மஹ்தாபு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

    இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    * 18வது மக்களவை இன்று தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய தேர்தல் மிகவும் பிரமாண்டமாகவும், கம்பீரமாகவும் நடத்தப்பட்டது.

    * புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள், வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன்.

    * 60 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    * மக்கள் 3-வது முறையாக வாய்ப்பளித்து உள்ளதால் முன்பைவிட 3 மடங்கு உற்சாகத்துடன் நாம் செயல்பட வேண்டும்.

    * எங்களின் நோக்கம், செயல்பாடு ஆகியவற்றுக்காகவே மக்கள் தொடர்ந்து 3-வது முறையாக வாய்ப்பளித்துள்ளனர்.

    * ஆட்சியை வழிநடத்த பெரும்பான்மை அவசியம். நாட்டை வழிநடத்த ஒத்துழைப்பு முக்கியம்.

    * அனைவரையும் ஒருங்கிணைத்து பாராளுமன்றத்தின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும்.

    * 140 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் புதிய எம்.பி.க்கள் செயல்பட வேண்டும்.

    * நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×