என் மலர்
இந்தியா
X
அஜ்மீர் தர்கா 811ம் ஆண்டு உருஸ் விழா - பிரதமர் மோடி சால்வை அனுப்பினார்
Byமாலை மலர்25 Jan 2023 3:02 AM IST
- ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவிடம் புனித போர்வை (சடார்) பிரதமர் மோடி வழங்கினார்.
- இந்நிகழ்வின் போது மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி உடன் இருந்தார்.
புதுடெல்லி:
இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் காஜா கரிபுன்நவாஸ் எனவும் அழைக்கப்படும் காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் 811-வது உருஸ் கொண்டாட்டங்கள் தற்போது அஜ்மீர் நகரில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த உருஸ் விழாவின்போது அவரது நினைவிடத்தின்மீது மலர்ப்போர்வைகளையும், சால்வைகளையும் அணிவித்து, மகிழும் மரபினை இங்குள்ள முஸ்லிம்களுடன், இந்து மக்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடத்தில் சமர்ப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி சால்வையை காணிக்கையாக வழங்கினார். அப்போது மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி உடனிருந்தார்.
Next Story
×
X