search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்- கார்கே
    X

    அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்- கார்கே

    • அமித் ஷா அம்பேத்கரை மட்டும் அவமதிக்கவில்லை, இந்திய குடிமக்களையும் இழிவுபடுத்தியுள்ளார்.
    • அமைச்சரவையில் நீடிக்க அவருக்கு உரிமை அமித் ஷாவுக்கு இல்லை.

    அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

    அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்நிலையில் அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "அவர்களுக்கு அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் மனுஸ்மிருதியைதான் பேசுகிறார்கள். அமித் ஷாவை பாதுகாக்க மோடி 6 டுவீட்டுகளை போட்டார். இதற்கான தேவை எங்கிருந்து வந்தது. மோடியும் அமித் ஷாவும் நண்பர்கள். அவர்கள் தங்களது பாவங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.

    பாஜகவும் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் அரசியலமைப்பை விட மநுஸ்மிருதி கொள்கைகளை தான் கடைப்பிடிக்கின்றனர். அமித் ஷா அம்பேத்கரை மட்டும் அவமதிக்கவில்லை. தலித்துகளையும் இந்திய குடிமக்களையும் அவர் அவமதித்துள்ளார் .

    பிரதமர் மோடிக்கு அம்பேத்கர் மீது மரியாதை இருந்தால், அவரை அவமதித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று இரவுக்குள் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். அமைச்சரவையில் நீடிக்க அவருக்கு உரிமை இல்லை" என்று தெரிவித்தார்.


    Next Story
    ×