search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Shashi Tharoor
    X

    பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்.. சசி தரூர் சொன்ன கருத்து..

    • அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார்.
    • பிரதமர் மோடி செயலுக்கு உக்ரைன் அதிபர் கடும் அதிருப்தி தெரிவித்து இருந்தார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21 ஆம் தேதி போலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு 23 ஆம் தேதி பிரதமர் மோடி, உக்ரைன் செல்ல இருக்கிறார். ரஷியா உக்ரைன் இடையே தீவிர போர் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி உக்ரைன் நாட்டுக்கு செல்கிறார்.

    முன்னதாக அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷியா சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தற்போது உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "நான் அதை ஏற்கனவே வரவேற்று இருந்தேன். அது நல்ல விஷயம் என்று நான் நம்புகிறேன். உக்ரைன் மருத்துவமனைகளில் ரஷியா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி குழந்தைகள் உயிரிழந்த போது, பிரதமர் மோடி ரஷிய அதிபரை கட்டியணைத்த சம்பவதத்துக்கு உக்ரைன் அதிபர் கடுமையான அதிருப்தி தெரிவித்து இருந்தார்."

    "உலகில் இன்று நடைபெறும் ஏராளமான மோதல்களில் இந்தியாவுக்கும் சமபங்கு வகிக்கிறது. இதனால், மாஸ்கோ சென்றதை போல் பிரதமர் மோடி கீவ் நகருக்கும் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திப்பது நல்ல விஷயமாகவே இருக்கும். மேலும், இருதரப்பு மீதும் அக்கறை செலுத்துவதாக இருக்கும். அமைதிக்கான விருப்பம் உள்ளிருந்து வரவேண்டும்."

    "அந்த வகையில் அவர்கள் இது குறித்து சிக்னல்களை அனுப்பினால் அதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டு, அதற்கு ஏற்ப செயல்படலாம். ஆனால், இத்தகைய முன்னெடுப்பே சாதனை தான். அமைதிக்கு தேவையான அளவுக்கு ஏதேனும் நடந்தால் நல்லது தான். ஆனால் அதுமட்டுமே அளவுகோலாக இருக்கக்கூடாது என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×