என் மலர்
இந்தியா
லைவ் அப்டேட்ஸ்- வயநாட்டு முகாமில் உள்ளவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்
- வயநாடு நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
- வயநாட்டில் மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் வயநாடு, சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் மாயமாகிவிட்டனர். மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி உள்பட பலர் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா சென்றடைந்தார்.
Live Updates
- 10 Aug 2024 4:24 PM IST
#WATCH | Kerala: Prime Minister Narendra Modi holds a review meeting with officials regarding the landslide-affected area in Wayanad.
— ANI (@ANI) August 10, 2024
Governor Arif Mohammed Khan, CM Pinarayi Vijayan and Union Minister Suresh Gopi are also present.
(Source: DD News) pic.twitter.com/Yv6c0sU36Yவயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி, மீட்புப்பணி தொடர்பான ஆய்வுக் கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது.
- 10 Aug 2024 3:09 PM IST
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பள்ளி முகாமில் தங்கவைப்பட்டுள்ளனர். அங்கு சென்ற பிரதமர் மோடி கண்கலங்கி நின்ற பாதிக்கப்பட்ட மக்களின் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார்.
#WATCH | Kerala: Prime Minister Narendra Modi visits the relief camp to meet and interact with the victims and survivors of the landslide in Wayanad.(Source: DD News) pic.twitter.com/EK0GxrJuSp
— ANI (@ANI) August 10, 2024#WATCH | Kerala: Prime Minister Narendra Modi along with CM Pinarayi Vijayan visit the relief camp to meet and interact with the victims and survivors of the landslide in Wayanad.(Source: DD News) pic.twitter.com/ZmwXM28E8O
— ANI (@ANI) August 10, 2024 - 10 Aug 2024 2:20 PM IST
நிலச்சரிவின் கோரத்தால் முண்டகை கிராமம் எவ்வாறு உருக்குலைந்துள்ளது என அதிகாரிகள் விளக்கி கூறினர்.
- 10 Aug 2024 2:16 PM IST
முண்டகை கிராமத்தில் ராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தில் சென்று பிரதமர் மோடி ஆய்வு மேற்கொள்கிறார்.
- 10 Aug 2024 2:14 PM IST
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
#WATCH | Kerala: Prime Minister Narendra Modi visits the landslide-affected area in Wayanad. He is being briefed about the evacuation efforts. Governor Arif Mohammed Khan, CM Pinarayi Vijayan and Union Minister Suresh Gopi are also present. (Source: DD News) pic.twitter.com/jzvj4mYaAR
— ANI (@ANI) August 10, 2024 - 10 Aug 2024 1:53 PM IST
ராணுவ அதிகாரிகள் நிலச்சரிவின் கோரம் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கி வருகின்றனர்.
#WATCH | Kerala: Prime Minister Narendra Modi visits the landslide-affected area in Wayanad. He is being briefed about the evacuation efforts. Governor Arif Mohammed Khan and Union Minister Suresh Gopi are also present. (Source: DD News) pic.twitter.com/rANSwzCcVz
— ANI (@ANI) August 10, 2024 - 10 Aug 2024 1:50 PM IST
பிரதமருடன் இணைந்து கேரள கவர்னர் ஆரிப்கானும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆய்வின்போது மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உடன் இருந்தார்.
- 10 Aug 2024 1:44 PM IST
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலையில் பிரதமர் மோடி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
- 10 Aug 2024 1:18 PM IST
வயநாட்டில் புஞ்சிரிமட்டம், முண்டகை, சூரல்மலை ஆகிய பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
- 10 Aug 2024 1:17 PM IST
ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டபோது இருவழிஞ்சி புழா (ஆறு) பிறப்பிடமாக இருக்கும் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை பார்வையிட்டார்.