என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![தமிழ் ராக்கர்ஸ்-ஐ தட்டித்தூக்கிய போலீஸ்.. பிருத்விராஜ் மனைவி கொடுத்த புகார்.. சிக்கியது எப்படி? தமிழ் ராக்கர்ஸ்-ஐ தட்டித்தூக்கிய போலீஸ்.. பிருத்விராஜ் மனைவி கொடுத்த புகார்.. சிக்கியது எப்படி?](https://media.maalaimalar.com/h-upload/2024/07/28/3618467-tamilrockersaidearrested.webp)
தமிழ் ராக்கர்ஸ்-ஐ தட்டித்தூக்கிய போலீஸ்.. பிருத்விராஜ் மனைவி கொடுத்த புகார்.. சிக்கியது எப்படி?
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழ் ராக்கர்ஸை சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விசாரணையில் 12 பேர் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தனுஷின் ராயன் திரைப்படத்தை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் கைது செய்யப்பட்டார். புதிய திரைப்படங்களை இணையங்களில் சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸை சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஏரியஸ் தியேட்டரில் படத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது மதுரையை சேர்ந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் கைது செய்யப்பட்டார். இது குறித்து காக்நாடு சைபர் போலீசார் நடத்திய விசாரணையில் 12 பேர் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரபல நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ்-இன் மனைவி சுப்ரியா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் தளம் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் ஸ்டீபன் ராஜ் படங்களை வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜை போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.