என் மலர்
இந்தியா
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு
- நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தோனேசிய அதிபர் இந்தியா வந்துள்ளார்.
- அவருக்கு, ராஷ்ட்ரீய பவனில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
நாட்டின் 76-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெறவுள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோ கலந்து கொள்கிறார்.
நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அவருக்கு, ராஷ்ட்ரீய பவனில் பாரம்பரிய முறைப்படி இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், பிரதமர் மோடி மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோ தலைமையில் இருநாட்டு அதிகாரிகளுடனான சந்திப்பு நடைபெற்றது. அப்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அவருக்கு, ராஷ்ட்ரீய பவனில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ள வந்ததற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நன்றி தெரிவித்தார்.
ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.