என் மலர்
இந்தியா
வங்கதேசத்தில் உள்ள மைனாரிட்டிகளை பாதுகாக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மம்தா வலியுறுத்தல்
- யார் இந்தியா திரும்ப விரும்புகிறார்களோ, அவர்கள் இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
- இந்திய-வங்கதேச எல்லை எதுவும் மூடப்படக் கூடாது. மூடப்படும் என்றால், நாம் அது தொடர்பாக தகவல் கொடுக்க வேண்டும்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். அதில் இருந்து வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட மைனாரிட்டிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வங்கதேச வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மைனாரிட்டிகளை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். மேலும் இந்தியா வருவதற்கு விருப்பம் தெரிவிப்பவர்களை இங்கு அழைத்து வர வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-
எங்களுடைய கோரிக்கை எல்லோரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். இந்திய அரசு இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகிறோம். நடவடிக்கை என்பதின் அர்த்தம் என்ன? அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அவர்களில் யார் இந்தியா திரும்ப விரும்புகிறார்களோ, அவர்கள் இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இந்திய-வங்கதேச எல்லை எதுவும் மூடப்படக் கூடாது. மூடப்படும் என்றால், நாம் அது தொடர்பாக தகவல் கொடுக்க வேண்டும். அதுபோன்ற தகவல் நாம் கொடுக்க முடியாது. இது அனைத்தும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசு மைனாரிட்டியை பாதுகாக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
ஏராளமான மக்கள் எல்லை வழியாக வந்து கொண்டிருக்கிறார்கள். சில இடங்களில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்களால் நிறுத்தப்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் அவர்கள் நிறுத்தப்படவில்ல. விமானம் மூலம் வருகிறார்கள். விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மக்கள் வந்து கொண்டிக்கிறார்கள். விசா மற்றும் பாஸ்போர்ட் வைத்துள்ளர்கள் வருகிறார்கள். இது நிறுத்தப்படவில்லை.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.