search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொல்கத்தாவில் மீண்டும் வெடித்த போராட்டம்..  சி.பி.ஐ.யை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கொல்கத்தாவில் மீண்டும் வெடித்த போராட்டம்.. சி.பி.ஐ.யை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

    • சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாததால் ஜாமீன் வழங்கப்பட்டது.
    • திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் ரகசிய புரிதல் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

    ஆர்.ஜி.கர் பயங்கரம்

    மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.ந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சஞ்சய் ராய் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

    இதற்கிடையே, ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்குக் கொல்கத்தா ஐகோர்ட் அறிவுறுத்தியது.

    அதன்படி விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ், தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை கைது செய்தனர்.

    ஜாமீன்

    இதற்கிடையே சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி மேற்கு வங்காள சீல்டா கோர்ட் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

    சட்டப்படி 90 நாட்களுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாததால் இருவருக்கும் ஜாமின் வழங்கப்படுவதாக கோர்ட் தெரிவித்துள்ளது.

    பெண் டாக்டர் வழக்கில் தொடர்புடைய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதால் கொல்கத்தாவில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

    மீண்டும் போராட்டம்

    இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸும் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் இன்று [சனிக்கிழமை] ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன

    மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் ரகசிய புரிதல் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    தெற்கு கொல்கத்தாவில் உள்ள நிஜாம் அரண்மனையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு ரவீந்திர சதன் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் தொண்டர்கள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத சிபிஐ -யை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிஜாம் அரண்மனைக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    மேலும் மேற்கு வங்க ஜுனியர் டாக்டர்கள் முன்னணி (WBJDF) இன்று மதியம் சால்ட் லேக்கில் உள்ள சிஜிஓ வளாகம் முதல் சிபிஐ அலுவலகம் வரை கண்டனப் பேரணியை நடத்தியது. மேலும் சிபிஐ அலுவலகத்தின் முன் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    'சிபிஐ என்ன திட்டமிடுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இருப்பினும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. நீதி கிடைக்க இறுதிவரை போராடுவோம்.

    சட்டப் போராட்டமும், தெருக்களில் நடக்கும் போராட்டமும் தொடரும்' என்று சால்ட் லேக்கில் நடந்த பேரணியில் கலந்துகொண்டபோது பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×