search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரள சட்டமன்ற உறுப்பினர் பி.வி. அன்வர் ராஜினாமா
    X

    கேரள சட்டமன்ற உறுப்பினர் பி.வி. அன்வர் ராஜினாமா

    • பினராயி விஜயன் கட்சி ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றார்.
    • சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    பினராயி விஜயன் கட்சி ஆதரவுடன் சுயேட்சை எம்.எல்.ஏ.-வாக தேர்வான பி.வி. அன்வர் சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் இன்று நீலாம்பூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    சபாநாயகர் ஏ.என். ஷாம்சீரை, சட்டமன்ற வளாகத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனத் தெரிவித்த பி.வி. அன்வர், காங்கிரஸ் தலைமையிலான UDF-க்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

    பினராயி விஜயனுக்கு எதிராக போராடுவேன் எனத் தெரிவித்துள்ள பி.வி. அன்வர், காங்கிரஸ் தலைவர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தினரை சேர்ந்த வேட்பாளரான நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    காங்கிரஸ் தலைமை மலப்புரம் டிசிசி தலைவர் வி.எஸ். ஜாயை (கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர்) நிறுத்த வேண்டும். அவர் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் யானை மிதித்து பழங்குடியின நபர் ஒருவர் உயிரிழந்ததற்கு எதிராக போராட்டம் நடத்தியபோது வனத்துறை அலுவலகம் சூறையாடப்பட்டது. அதற்கான பி.வி. அன்வர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×