search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கூட்ட நெரிசல்: பலியானோர் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல்
    X

    திருப்பதி கூட்ட நெரிசல்: பலியானோர் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல்

    • திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா உள்பட 6 பேர் பலியாகினர்.
    • நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி பண்டிகைக்கான சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் இன்று செய்யப்பட்டது.

    இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா உள்பட 6 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை திருப்பதி வருகிறார் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×