search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமெரிக்காவிலும் அதானி ஊழலை மறைக்கிறார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி தாக்கு
    X

    அமெரிக்காவிலும் அதானி ஊழலை மறைக்கிறார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி தாக்கு

    • அதிபர் டிரம்புடன் அதானி விவகாரம் குறித்து பேசவில்லை என்றார் பிரதமர் மோடி.
    • அமெரிக்காவில் கூட மோடிஜி அதானியின் ஊழல்களை மறைக்கிறார் என்றார் ராகுல் காந்தி.

    புதுடெல்லி:

    தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி டிரம்புடன் இது குறித்து பேசவில்லை என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் தலைவர்கள் பேசுவது இல்லை என விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதானி விவகாரம் குறித்து இந்தியாவில் நீங்கள் கேள்வி எழுப்பினால், மவுனமே பதிலாக இருக்கும். வெளிநாட்டில் கேள்வி கேட்டால் அது தனிப்பட்ட விவகாரமாகி விடும். அமெரிக்காவில் கூட மோடிஜி அதானியின் ஊழல்களை மறைக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×