என் மலர்
இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி
- டெல்லியில் இருந்த ஜம்மு செல்லும் ராகுல், பனிஹால் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.
- அதன்பின் அனந்த்நாக் மாவட்டம் சென்று முன்னாள் மந்திரியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25-ந்தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ந்தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.
முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் இன்று இரண்டு இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
டெல்லியில் இருந்து ஜம்மு வரும் ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் விகார் ரசூல் வாணிக்காக பிரசாரம் மேற்கொள்கிறார். விகார் ரசூல் வாணி பனிஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அதனைத் தொடர்ந்து அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள டூரு பகுதிக்குச் செல்கிறார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் மந்திரி குலாம் அகமது மிர்-ஐ ஆதரித்து மெகா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இவர் டூரு தொகுதியில் போட்டியிடுகிறார்.
பின்னர் ஸ்ரீநகரில் இருந்து மாலை டெல்லி திரும்புகிறார். இந்த தகவலை ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கட்சி தலைவர் தரீக் ஹமித் கர்ரா தெரிவித்துள்ளார்.