search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பட்ஜெட் துப்பாக்கி தோட்டா காயங்களுக்கு Band-Aid போட்டுள்ளது: ராகுல் காந்தி
    X

    மத்திய பட்ஜெட் துப்பாக்கி தோட்டா காயங்களுக்கு Band-Aid போட்டுள்ளது: ராகுல் காந்தி

    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
    • அவருக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், துப்பாக்கித் தோட்டா காயங்களுக்கு ஒரு கட்டு போடப்பட்டுள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நமது பொருளாதார நெருக்கடியை சரிசெய்வதற்கு ஒரு முன் உதாரண மாற்றம் தேவைப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் யோசனைகள் எதுவும் இல்லாமல் திவாலாகி விட்டது என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×