என் மலர்
இந்தியா
'I LOVE WAYANAD'.. தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தியின் டி-ஷர்ட்டை பார்த்து ஆர்ப்பரித்த மக்கள்
- வயநாடு தொகுதியில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடியவுள்ளது.
- இன்று சுல்தான் பத்தேரி பகுதியில் பிரியங்கா காந்தியுடன் இணைந்து ராகுல் காந்தியும் பிரசாரம் மேற்கொண்டார்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில், ஏற்கனவே அந்த தொகுதியில் எம்.பியாக இருந்த ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
அவர் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை கடந்த 2-ந்தேதி தொடங்கினார். அவர் வயநாடு தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும் பல பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று பேசினார்.
பிரசாரத்தின் போது அவர் கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். வயநாடு தொகுதியில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடியவுள்ள நிலையில், சுல்தான் பத்தேரி பகுதியில் பிரியங்கா காந்தியுடன் இணைந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது ராகுல் காந்தி தனது டீ-ஷர்ட் பின்புறம் 'I LOVE WAYANAD' என்று எழுதியிருந்ததை பார்த்து பொதுமக்கள் ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான வீடியோவை கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
#Wayanad loves them & @priyankagandhi & @RahulGandhi love people of Wayand. It is a wonderful election campaign. It shows love & respect people have for their leaders & immense support & love the leaders give back! Through Priyanka ji 's victory Wayanad will write history. pic.twitter.com/Uk8rs9zchb
— V D Satheesan (@vdsatheesan) November 11, 2024