என் மலர்
இந்தியா

X
ராமர் கோவில் அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது
By
மாலை மலர்17 March 2025 11:21 AM IST

- ரூ.400 கோடியில் ரூ.270 கோடி ஜிஎஸ்டி வரியாக செலுத்தப்பட்டது.
- அயோத்தியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை நிர்வகிக்கும் ராம ஜென்மபூமி அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது என்று அந்த அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய சம்பத் ராய், "2020 பிப்ரவரி 5 முதல் 2025 பிப்ரவரி 5 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரியை ராம ஜென்மபூமி அறக்கட்டளை செலுத்தியுள்ளது. இதில், ரூ.270 கோடி ஜிஎஸ்டி வரியாக செலுத்தப்பட்டது.
அயோத்தியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இது உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மகா கும்பமேளாவின் போது 1.26 கோடி பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்தனர். கடந்த ஆண்டு அயோத்திக்கு 16 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அதில் 5 கோடி பேர் ராமர் கோயிலுக்கு வருகை தந்தனர்" என்று தெரிவித்தனர்.
Next Story
×
X