என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![5 முறை சம்மன் அனுப்பியும் பலனில்லை: கெஜ்ரிவால் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு 5 முறை சம்மன் அனுப்பியும் பலனில்லை: கெஜ்ரிவால் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு](https://media.maalaimalar.com/h-upload/2024/02/07/2007660-kejri.webp)
X
5 முறை சம்மன் அனுப்பியும் பலனில்லை: கெஜ்ரிவால் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
By
மாலை மலர்7 Feb 2024 5:21 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 5 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
- வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யு நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுடெல்லி:
டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிலரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. அவர்கள் ஜாமின் கிடைக்காமல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் மேல் சம்மனாகக் கொடுத்து வருகிறது. ஆனால் அவர் ஆஜராக மறுத்து வருகிறார்.
இதற்கிடையே, 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என அமலாக்கத் துறை சார்பில் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த ரோஸ் அவென்யு நீதிமன்றம், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story
×
X