search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க. கூட்டணியில் நிதிஷ்குமார் இருப்பாரா  என்பது சந்தேகமே: சஞ்சய் ராவத்
    X

    பா.ஜ.க. கூட்டணியில் நிதிஷ்குமார் இருப்பாரா என்பது சந்தேகமே: சஞ்சய் ராவத்

    • பீகாரில் நிதிஷ்குமாருடன் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது.
    • அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் உள்ளது.

    மும்பை:

    உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பீகார் மாநிலத்தில் கூட்டணிக் கட்சியை பா.ஜ.க. முதுகில் குத்தியது.

    பீகாரில் நிதிஷ்குமாருடன் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. 10 ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.பி.க்களை வேட்டையாடும் வேலையை தொடங்கியுள்ளது.

    இதனால் நிதிஷ்குமார் கலக்கத்தில் உள்ளார். அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் உள்ளது.

    வரும் பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி போட்டியிடுவது சாத்தியமில்லை என தெரிவித்தார்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி 2 ஆண்டு நீடிக்குமா என்பது சந்தேகமே என சில தினங்களுக்கு முன் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×