search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிப்பார்கள்: சஞ்சய் ராவத்
    X

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிப்பார்கள்: சஞ்சய் ராவத்

    • இது ஒரு சட்ட போராட்டம், சில விதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் சில உத்தரவுகள் உள்ளன.
    • அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு திரும்புவதற்காக கட்சி காத்திருக்கிறது.

    மும்பை :

    மகா விகாஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என சிவசேனாவை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் காரணமாக சட்டமன்றத்தில் எங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிருப்தியாளர்கள் குழு தன்னிடம் தேவையான எண்ணிக்கையில் இருப்பதாகவும், ஜனநாயக முறையில் தாங்கள் இயங்குவதாகவும் கூறுகின்றனர்.

    ஆனால் இந்த எண்ணிக்கை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அதிருப்தியாளர்கள் திரும்பி வரும்போது, பாலாசாகேப் தாக்கரே மற்றும் சிவசேனா மீதான அவர்களின் விசுவாசத்தை அது சோதிக்கும்.

    இது ஒரு சட்ட போராட்டம், சில விதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் சில உத்தரவுகள் உள்ளன. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி ஒன்றாக உள்ளது.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மகா விகாஸ் அகாடிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு திரும்புவதற்காக கட்சி காத்திருக்கிறது.

    பெரும்பாலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு மீண்டும் திரும்புவார்கள் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நம்புகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×