என் மலர்
இந்தியா
ஆம் ஆத்மியின் "Unbreakable" ஆவணப்படம் திரையிடுவதை தடுத்து நிறுத்திய போலீசார்: கெஜ்ரிவால் கண்டனம்
- தேர்தல் பிரசாரம் அல்ல. தேர்தல் கொடி கிடையாது. தேர்தல் பேச்சு அல்லது தேர்தல் பிரசாரம் கிடையாது.
- இந்த படத்தால் பாஜக ஏன் பயப்பட வேண்டும்?
டெல்லி மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளும் ஏராளமான இலவச அறிவுப்புகளை அள்ளி வீசியுள்ளது.
மும்முனை போட்டி என்றாலும் ஆம் ஆத்மி- பாஜக இடையில்தான் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சி தலைவர்களும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி "Unbreakable" என ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தை இன்று பத்திரிகையாளர்களுக்கு ஆம் ஆத்மி கட்சி திரையிட முடிவு செய்தது. ஆனால் திரையிடுவதற்கு முன்னதாக போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
இந்த ஆவணப்படம் ஆம் ஆத்மியால் உருவாக்கப்பட்டது. இன்று பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிட இருந்தோம். இன்று காலை போலீசார் வந்து படம் திரையிடுவதை நிறுத்தினர். போலீசார் இதுபோன்று தடுத்து நிறுத்த எந்தவொரு சட்டமும் அனுமதிக்கவிலலை. இது தேர்தல் பிரசாரம் அல்ல. தேர்தல் கொடி கிடையாது. தேர்தல் பேச்சு அல்லது தேர்தல் பிரசாரம் கிடையாது. இது தனியாக காண்பிக்கப்படும் படம். இந்த படத்தால் பாஜக ஏன் பயப்பட வேண்டும்? படம் நிறுத்தப்பட்டதற்கு நாங்கள் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறோம். நாங்கள் அனுமதி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.