என் மலர்
இந்தியா
காரக்பூரில் ஐஐடி மாணவர் தற்கொலை- விடுதி அறையில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
- மாணவரின் மறைவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
- சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரக்பூர்:
மேற்கு வங்காள மாநிலம் காரக்பூரில் உள்ள ஐஐடி விடுதியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விடுதி அறையில் அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
அந்த மாணவர், அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், சமீபத்தில் விடுதியில் சேர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவரின் மறைவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகங்களில் சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 15ம் தேதி சென்னை ஐஐடியில் ஒரு மாணவர், 17ம் தேதி கவுகாத்தி ஐஐடியில் ஒரு மாணவர் என இறந்துள்ளார். இதேபோல் ஐதராபாத், கான்பூரிலும் கடந்த மாதம் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.