என் மலர்
இந்தியா
பரீட்சைக்கு வந்த பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த மூத்த மருத்துவர்..
- மூத்த மருத்துவர் சஞ்சய் குமார் இவானே வன்கொடுமை செய்துள்ளார்.
- அவர்கள் அறையை அடைந்ததும், சஞ்சய் கதவை மூடினார்
மத்தியப் பிரதேசத்தில் இறுதியாண்டு பயின்று வந்த எம்பிபிஎஸ் மாணவி மூத்த மருத்துவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த அம்மாணவியை விடுதியில் வைத்து மூத்த மருத்துவர் சஞ்சய் குமார் இவானே வன்கொடுமை செய்துள்ளார்.
தகவலின்படி, டாடியாவைச் சேர்ந்த 25 வயது இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவி துணைத் தேர்வுக்கு பின் கல்லூரியில் அவரது மூத்த மருத்துவர் சஞ்சய் குமார் இவானைச் சந்தித்தார்.
அப்போது மாணவியை எதோ வேலை கூறி ஆண்கள் விடுதியில் உள்ள தனது அறைக்கு சஞ்சய் அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் அறையை அடைந்ததும், சஞ்சய் கதவை மூடிவிட்டு, மாணவியை தள்ளிவிட்டு வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அடுத்த நாள் பாதிக்கப்பட்ட பெண் கம்பூ காவல் நிலையத்திற்குச் சென்று அவர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டாக்டர் சஞ்சய் குமாரை தேடி வருகின்றனர்.