search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சரிவுடன் முடிவடைந்த பங்குச் சந்தைகள்
    X

    சரிவுடன் முடிவடைந்த பங்குச் சந்தைகள்

    • இன்று அதிகபட்சமாக 73,649.72 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகம் ஆனது.
    • குறைந்தபட்சமாக 72,784.54 புள்ளிகளில் வர்த்தகமானது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 1,414.33 புள்ளிகள் சரிந்து 73,198.10 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    பங்குச் சந்தைகளுக்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறை. இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியது. வெள்ளிக்கிழமை வர்த்தக நிறைவு பெற்றதைவிட சென்செக்ஸ் புள்ளிகள் சுமார் 129 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73,427.65 புள்ளிகளுடன் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது.

    இன்று அதிகபட்சமாக 73,649.72 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகம் ஆனது. பின்னர் சரிவதும், ஏறுவதுமாக இருந்தது. குறைந்தபட்சமாக 72,784.54 புள்ளிகளில் வர்த்தகமாகி இறுதியில் 112.16 புள்ளிகள் சரிவடைந்து 73,085 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தையின் முக்கிய 30 பங்குகளில் டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், சொமேட்டோ, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப், டைடன், அல்ட்ரா டெக் சிமெண்ட், என்.டி.பி.சி., மஹிந்திரா அண்டு மஹிந்திரா, கோடக் மஹிந்திரா, எல் அண்டு டி, எஸ்பிஐ, இன்போசிஸ், பாரதி ஏர்டெல், டிசிஎஸ் நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.டிஃப்.சி. பேங்க், இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், மாருதி சுசுகி, ஆக்சிஸ் பேங்க், பாஜாஜி பின்செர்வ், அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா, ஆசியன் பெயின்ட்ஸ், இந்துஸ்இந்த் பேங்க் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு சென்செக்ஸ் போன்று இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று 5.40 புள்ளிகள் சரிவை சந்தித்தது.

    கடந்த வெள்ளிக்கிழமை நிஃப்டி 420.35 புள்ளிகள் சரிந்து 22,124.70 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 22,194.55 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக 22,261.55 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 22,004.70 புள்ளிகளிலும் வர்த்தமானது. இறுதியாக 5.40 புள்ளிகள் சரிந்து 22,119.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    Next Story
    ×