search icon
என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 450 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவு: நிஃப்டியும் சறுக்கல்
    X

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 450 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவு: நிஃப்டியும் சறுக்கல்

    • ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், எஸ்பிஐ, ஐ.டி.சி. பங்குகள் சரிவை சந்தித்தன.
    • இந்துஸ்தான் யுனிலிவர், ஹெ.சி.எல். டெக்னாலாஜிஸ், சொமேட்டோ, ஆசியன் பெயின்ட்ஸ், டெக் மஹிந்திரா பங்குகள் ஏற்றம் கண்டன.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு 78637.58 புள்ளிகளுடன் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 78,699.07 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று காலை சென்செக்ஸ் 61.49 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.

    பின்னர் இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 79,092.70 புள்ளிகளில் வர்த்தகமானது. குறைந்தபட்சமாக சென்செக்ஸ் 78,077.136 புள்ளிகளில் வர்த்தகமானது.

    இறுதியாக சென்செக்ஸ் 450.94 புள்ளிகள் குறைந்து மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 78,248.13 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 168.50 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    வெள்ளிக்கிழமை நிஃப்டி 23,813.40 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 23,796.90 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    இன்று அதிகபட்சமாக நிஃப்டி 23915.35 புள்ளிகளிலும், குறந்தபட்சமாக 23599.30 புள்ளிகளிலும் வர்த்தகமாகி இறுதியில் 168.50 புள்ளிகள் குறைந்து இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23644.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், எஸ்பிஐ, ஐ.டி.சி., எல் அண்டு டி போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    இந்துஸ்தான் யுனிலிவர், ஹெ.சி.எல். டெக்னாலாஜிஸ், சன் பார்மாசெயுட்டிகள், சொமேட்டோ, ஆசியன் பெயின்ட்ஸ், டெக் மஹிந்திரா பங்குகள் ஏற்றம் கண்டன.

    Next Story
    ×