search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க மம்தா பானர்ஜிக்கு முழு தகுதியும் உள்ளது - சரத் பவார் பச்சைக்கொடி
    X

    இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க மம்தா பானர்ஜிக்கு முழு தகுதியும் உள்ளது - சரத் பவார் பச்சைக்கொடி

    • வாய்ப்பு கிடைத்தால் கொல்கத்தாவில் இருந்தே இந்தியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன்
    • மகா.சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 288 இடங்களில் 48 இடங்களை மட்டுமே மகா விகாஸ் அகாதி [இந்தியா] கூட்டணி கைப்பற்றியது

    பாஜகவின் என்டிஏ கூட்டணியை எதிர்க்க கடந்த மக்களவை தேர்தல் சமயத்தில் காங்கிரசுடன் மாநிலக் கட்சிகள் சேர்நது உருவாக்கிய இந்தியா கூட்டணி உள்விவகாரங்களில் சிக்கித் திணறி வருகிறது. மாகாரஷ்டிரா மற்றும் அரியானா தோல்வி காங்கிரஸ் மீதான கோபமாக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் மத்தியில் மாறி வருகிறது.

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகள் உருவாக்கிய மகா.விகாஸ் அகாதி படுதோல்வியை அடுத்து கூட்டணியில் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி மகா. கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. உத்தவ் தாக்கரே பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவளிப்பதாகக் கூறி சமாஜ்வாதி வெளியேறி உள்ளது.

    இதற்கு மத்தியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தான் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் என்று சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்.

    கொல்கத்தாவில் தனியார் செய்தி ஊடகத்துக்குப் பேட்டி அளித்த மம்தா, நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன், ஆனால் அவர்களால் [எதிர்க்கட்சிகள்] அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? நான் அனைத்து தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுடனும் சிறந்த உறவைப் பேணுகிறேன் என்றார்.

    ஏன் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த மம்தா, வாய்ப்பு கிடைத்தால் கொல்கத்தாவில் இருந்தே இந்தியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் மம்தா இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க முழு தகுதியும் உள்ளவர் என்று மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் பிரிவு தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நேற்று [சனிக்கிழமை] கோலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், மம்தா திறமையான தலைவர், எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை தங்குவதாக கூற அவருக்கு முழு உரிமை உள்ளது.

    அவர் பாராளுமன்றத்திற்கு அனுப்பிய [திரிணாமுல் காங்கிரஸ்] எம்.பி.க்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் விழிப்புணர்வு கொண்டவர்கள் என்று பாராட்டிப் பேசினார்.

    ராகுல் காந்தி மீது இந்தியா கூட்டணி தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் சரத் பவார் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    மகா.சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 288 இடங்களில் 48 இடங்களை மட்டுமே மகா விகாஸ் அகாதி [இந்தியா] கூட்டணி கைப்பற்றியது. இதில் சரத் பவார் என்சிபி 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

    Next Story
    ×