என் மலர்
இந்தியா
புத்தாண்டு முதல் பொய் பேசுறத விடுங்க.. கெஜ்ரிவாலுக்கு பாஜக கடிதம் - மோகன் பகவத்திற்கும் பறந்த லெட்டர்
- நேர்மையற்ற மற்றும் வஞ்சகமான அரசியலை கைவிட்டு, அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டுவர கெஜ்ரிவால் பாடுபடுவார் என்று நம்புகிறேன்
- ஆர்எஸ்எஸ் தலைவருக்கு மோகன் பகவத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்
புத்தாண்டு முதல் பொய் சொல்ல மாட்டேன் என உறுதி மொழி எடுக்கும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி பாஜக தலைவர் கடிதம் எழுதி உள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா எழுதியுள்ள கடிதத்தில், புத்தாண்டு வாழ்த்துகள், சிறுவயதில் இருந்தே புத்தாண்டு தினத்தில் கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு நல்ல மற்றும் புதிய ஒன்றைத் தொடங்க நாங்கள் அனைவரும் தீர்மானம் செய்கிறோம்.
2025 ஆம் ஆண்டின் முதல் நாளில், நேர்மையற்ற மற்றும் வஞ்சகமான அரசியலை கைவிட்டு, அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டுவர கெஜ்ரிவால் பாடுபடுவார் என்று நம்புகிறேன்.
தனது புத்தாண்டு தீர்மானத்தின் ஒரு பகுதியாக, கெஜ்ரிவால் தனது குழந்தைகளின் பெயரில் சத்தியம் செய்யக்கூடாது என்றும், மதுபானத்தை ஊக்குவித்ததற்காகவும் யமுனை நதியை சுத்தம் செய்வதாக தவறான உறுதிமொழிகளை வழங்கியதற்காகவும் மன்னிப்பு கேட்க வேண்டும் சச்தேவா தெரிவித்தார்.
டெல்லியின் பெண்கள், பெரியவர்கள் மற்றும் மத சமூகங்களின் உணர்வுகளுடன் விளையாடும் வகையில், பொய் வாக்குறுதிகளை அளிப்பதை ஆம் ஆத்மி தலைவர் நிறுத்துவார் என்றும், அரசியலுக்காக தேச விரோத சக்திகளின் நன்கொடைகளை திரட்டவோ அல்லது ஏற்கவோ மாட்டார் என்று நம்புகிறேன் என்றும் பாஜக தலைவர் மேலும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நீதியின் பாதையில் நடக்க கடவுள் உங்களுக்கு பலம் தரட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#WATCH | Delhi | State BJP President Virendraa Sachdeva reaches a post office in Delhi to post a letter to AAP National Convenor Arvind Kejriwal.Reciting the letter, he says, "On the first day of the New Year, the people of Delhi hope that you give up your habit of lying and… pic.twitter.com/WYMEAs3XUA
— ANI (@ANI) January 1, 2025
இதற்கிடையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், பாஜக வெளிப்படையாக பணம் விநியோகம் செய்வதும், தலித் வாக்காளர்களை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக டெல்லியின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சிப்பதும், பாஜக செய்யும் அனைத்து தவறுகளும் உங்களுக்கு தெரிந்துதான் நடக்கிறதா? என்று கேட்டிருந்தார்.