search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
    X

    மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

    • வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    • வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என அரசுக்கு உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் பலாத்கார வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டனர்.

    மேலும் விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளபோது, அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.

    இதற்கிடையே போலீஸ் கமிஷனருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்ற ஐகோா்ட்டு உத்தரவை நீக்கி உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் வக்கீல் டி.குமணன் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×