என் மலர்
இந்தியா

ஆபாசப் பேச்சு யூடியூபரை கைது செய்ய இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு

- ரன்வீர் மீது மகாராஷ்டிரா, அசாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- கொஞ்ச காலத்துக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேறக வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
பீர்பைசெப்ஸ் என்று அறியப்படும் பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா கேட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமீபத்தில் India's Got Tatent நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது கருத்துக்கு ரன்வீர் மன்னிப்பு கேட்டார். இதனையடுத்து ரன்வீர் மீது மகாராஷ்டிரா, அசாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
When @thetanmay exposed the 'spirituality' of @BeerBicepsGuy & called him a "Views Obsessed Mother Fcuking Capitalist".... EVEN Tanmay would not have guessed how close to reality he was hitting.(BTW #RanveerAllahabadia knows his audience - he will end up with even more followers… pic.twitter.com/whwrjkpkpD
— The DeshBhakt ?? (@TheDeshBhakt) February 10, 2025
இந்நிலையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவும் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கவும் ரன்வீர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஆபாசமாக பேசுவது நகைச்சுவை அல்ல, இவ்வழக்கில் எவ்வாறு நிவாரணம் கோரமுடியும்? என்று கண்டனம் தெரிவித்தது.
தொடர்ந்து விசாரணையில் ரன்வீர் முழுமையாக ஒத்துழைப்பார் என்று வாக்குறுதி அளித்தததை அடுத்து இடைக்கால தடையாணை பிறப்பித்து அவரது கைது நடவடிக்கையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
மேலும் ரன்வீர் தனது பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்ற அனுமதி இன்று வெளிநாடு செல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ரன்வீர் தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கொஞ்ச காலத்துக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேறக வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.