என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![ஆளுநருக்கு உத்தரவிடக் கோரும் வழக்கு- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிடக் கோரும் வழக்கு- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/10/9157098-rnravi.webp)
ஆளுநருக்கு உத்தரவிடக் கோரும் வழக்கு- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழக அரசின் ரிட் மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
- பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
மசோதாக்கள், துணை வேந்தர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட கோரும் தமிழக அரசின் ரிட் மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த மீனு மீதான விசாரணையின்போது, அரசமைப்பு சட்டத்தின்படி பேரவையில் 2வது முறையாக இயற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முதன் முறையாக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஆளுநர் அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியும்.
ஆனால், மீண்டும் நிறைவேற்றப்பட்டு கிடைக்கப்பெறும் மசோதாககளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியாது என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து நீதிபதிகள், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்தனா். அதாவது தமிழக அரசு அனுப்பிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் என்றால் அதற்கான காரணம் என்ன?. ஆளுநர் அப்படி ஏன் செய்ய வேண்டும். அது என்னவென்று ஆளுநர் தரப்பில் கூறப்படவில்லை என்றால் தமிழக அரசுக்கு எப்படி அதுபற்றி தெரியவரும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
மேலும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? ஆளுநருக்கா அல்லது மாநில அரசுக்கா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தொடர்ந்து, தமிழக அரசின் ரிட் மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.