என் மலர்
இந்தியா
நவகேரள சதாசில் பங்கேற்ற 3 பேர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்
- காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
- இளைஞர் காங்கிரசார் நடத்திய கருப்பு கொடி காட்டும் போராட்டம் மோதலில் முடிந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் நவகேரள சதாஸ் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் பயணம் செய்வதற்காக ரூ1.5கோடியில் சொகுசு வாகனம் வாங்கப்பட்டதற்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் நவகேரள சதாஸ் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரசார் நடத்திய கருப்பு கொடி காட்டும் போராட்டம் மோதலில் முடிந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் நவகேரள சதாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகள் 3 பேரை காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லம் லீக் கட்சி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.
ஓமச்சேரியில் நடந்த நவகேரள சதாசில் பங்கேற்றதற்காக காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அபுபக்கரை அக்கட்சி சஸ்பெண்டு செய்துள்ளது. இதேபோல் உசேன், மொய்து ஆகிய 2 பேரையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நீக்கம் செய்துள்ளது.