என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![டெல்லி போராட்டம்- காங்கிரஸ் தொண்டர்கள் போலீசாரை தாக்கியதாக குற்றச்சாட்டு டெல்லி போராட்டம்- காங்கிரஸ் தொண்டர்கள் போலீசாரை தாக்கியதாக குற்றச்சாட்டு](https://media.maalaimalar.com/h-upload/2022/06/15/1713052-congress.jpg)
டெல்லி போராட்டம்- காங்கிரஸ் தொண்டர்கள் போலீசாரை தாக்கியதாக குற்றச்சாட்டு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு இருந்த போலீசாரின் தடுப்புகளை சில தொண்டர்கள் உடைத்தனர்.
- மேலும் டயர்களுக்கு தீ வைக்கப்பட்டது. அது கொளுந்து விட்டு எரிந்ததால் கரும்புகை எழுந்தது.
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தலைவர்களும், தொண்டர்களும் செல்ல முடியாதபடி போலீசார் தடுப்புகளை வைத்து இருந்தனர். ஆனால் தொண்டர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர்.
அவர்கள் அலுவலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் அனுமதிக்க மறுத்தனர். இதனால் சத்தீஷ்கர் முதல்- மந்திரி பூமேஷ் பாகேல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு இருந்த போலீசாரின் தடுப்புகளை சில தொண்டர்கள் உடைத்தனர். மேலும் டயர்களுக்கு தீ வைக்கப்பட்டது. அது கொளுந்து விட்டு எரிந்ததால் கரும்புகை எழுந்தது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசாரை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.