என் மலர்
இந்தியா
பிரதமர் மோடி எனக்கு பெரிய பொறுப்பை அளித்துள்ளார்... குமாரசாமி
- மத்திய மந்திரியாக குமாரசாமி பதவியேற்று இருப்பது இதுவே முதல் முறை.
- கனரக தொழில்துறை மற்றும் எஃகு துறை குமாரசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி வெற்றி பெற்றார். இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சரவையில் குமாரசாமி மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார். கனரக தொழில்துறை மற்றும் எஃகு துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய மந்திரியாக குமாரசாமி பதவியேற்று இருப்பது இதுவே முதல் முறை.
இந்நிலையில், மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் குமாரசாமி இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதியில் சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்த பின் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடி எனக்கு பெரிய பொறுப்பை அளித்துள்ளார். மத்திய அரசில் அமைச்சராக பதவி வகித்து வெற்றி பெற வெங்கடேஸ்வராவின் ஆசிர்வாதம் பெற வந்தேன் என்றார்.