என் மலர்
இந்தியா
லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை
- திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறக முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார்.
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்து வருகிறது.
இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார். திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இதில், மத்திய அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் இடம்பெறுகின்றன.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.
Live Updates
- 31 Jan 2023 11:48 AM IST
பிரதமரின் கரீம் கல்யாண் யோஜனா திட்டத்தை முன்னெடுத்து செல்ல அரசு முடிவு செய்துள்ளது. பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் ஆசைகளை நிறைவேற்றும் அரசு. விவசாயிகள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது- ஜனாதிபதி திரவுபதி முர்மு.
- 31 Jan 2023 11:41 AM IST
கொரோனா காலத்தில் மக்கள் பசியாற பிரதமர் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. நவீனத்துவம் மூலம் மக்களை அணுகுவதால் இந்த திட்டங்கள் அனைவரையும் சென்றடைகின்றன- ஜனாதிபதி திரவுபதி முர்மு.
- 31 Jan 2023 11:36 AM IST
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பெரும்பாலான ஏழை மக்கள் பயன்பெறுகிறார்கள்- ஜனாதிபதி திரவுபதி முர்மு.
- 31 Jan 2023 11:34 AM IST
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் மற்றும் மக்கள் மருந்தகம் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரு கோடி சூபாய்க்கு மேல் லாபம்- ஜனாதிபதி திரவுபதி முர்மு.
- 31 Jan 2023 11:31 AM IST
டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு அமைப்பிலும் நேர்மைக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கமேக இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது- ஜனாதிபதி திரவுபதி முர்மு.
- 31 Jan 2023 11:27 AM IST
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசத்தை கட்டமைக்கும் கடமையுடன் மத்திய அரசு அயராது பணியாற்றி வருகிறது. அரசு துறையில் ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது. ஊழலை ஒழிக்க பினாமி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது- ஜனாதிபதி திரவுபதி முர்மு
- 31 Jan 2023 11:22 AM IST
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏழைகளை காப்பாற்றும் அதே வேளையில் நவீனத்துவமும் கடைபிடிக்கப்படுகிறது. இரு முறை இந்த அரசை தேர்வு செய்த நாட்டு மக்களுக்கு நன்றி- ஜனாதிபதி திரவுபதி முர்மு
- 31 Jan 2023 11:14 AM IST
அனைவருக்கும் வளர்ச்சி என்ற விதத்தில் மத்திய அரசு நடைபோட்டு வருகிறது. 9 ஆண்டுகளில் இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது. நாம் விரும்பிய நவீன கட்டமைப்பை நோக்கி நாம் நகரத் தொடங்கியுள்ளோம்- ஜனாதிபதி திரவுபதி முர்மு
- 31 Jan 2023 11:13 AM IST
2047ம் ஆண்டிற்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழ்மையற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும். 2047ம் ஆண்டில் அடையவிருக்கும் லட்சியத்திற்கு ஏற்ற அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்துள்ளார்.