search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற 5-வது கட்ட தேர்தல்: 9 மணி நிலவரப்படி மேற்கு வங்காளத்தில் 15.35 சதவீத வாக்குகள் பதிவு
    X

    பாராளுமன்ற 5-வது கட்ட தேர்தல்: 9 மணி நிலவரப்படி மேற்கு வங்காளத்தில் 15.35 சதவீத வாக்குகள் பதிவு

    • வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    • அமேதி, ரேபரேலி, பைசாபாத் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தொகுதிகளில் தோ்தல் நடைபெறுகிறது.

    நாட்டில் புதிய அரசுடன் 18-வது பாராளுமன்றத்தை தோ்வு செய்ய 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் (ஏப்ரல்) 19, 26, இந்த மாதம் (மே) 7, 13-ந்தேதிகளில் முதல் 4 கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. இந்த 4 கட்டத் தோ்தல்களில் சராசரியாக 66.95 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 இடங்களுக்கு தோ்தல் நிறைவடைந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) 5-ம் கட்ட தேர்தல் 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது. வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    அமேதி, ரேபரேலி, பைசாபாத் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தொகுதிகளில் இத்தோ்தல் நடைபெறுகிறது. இதில் பைசாபாத் பாராளுமன்றத் தொகுதி, அயோத்தி நகரை உள்ளடக்கியதாகும்.

    5-ம் கட்டமாக இன்று நடந்து வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்காளத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.


    49 தொகுதிகளிலும் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவை காண முடிந்தது. உத்தரபிரதேசத்தில் முந்தைய 4 கட்ட தேர்தல்களை விட இன்று அதிகளவு வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    இதை அடுத்து, காலை 9 மணி நிலவரப்படி 5-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 10.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    பீகார் - 8.86 சதவீதம்

    உத்தரபிரதேசம்- 10.88 சதவீதம்

    ஜம்மு & காஷ்மீர் - 7.63 சதவீதம்

    ஜார்க்கண்ட் - 11.68 சதவீதம்

    லடாக்- 10.51 சதவீதம்

    மகாராஷ்டிரா - 6.33 சதவீதம்

    ஒடிசா- 6.87 சதவீதம்

    மேற்கு வங்காளம்- 15.35 சதவீதம்


    Next Story
    ×