search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உள்கட்டமைப்பு மேம்பாடு 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற உதவும்- பிரதமர் மோடி
    X

    உள்கட்டமைப்பு மேம்பாடு 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற உதவும்- பிரதமர் மோடி

    • நடப்பு ஆண்டு பட்ஜெட் நாட்டின் உள்கட்டமைப்பு துறையின் வளர்ச்சிக்கு புதிய ஆற்றலை அளிக்கிறது.
    • சாலைகள், ரெயில் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் நவீன உள்கட்டமைப்புகள்.

    பொருளாதாரத்தின் உந்து சக்தியாக உள்கட்டமைப்பு மேம்பாட்டை அரசாங்கம் கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையதள உரையில் பிரதமர் மோடி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு பட்ஜெட் நாட்டின் உள்கட்டமைப்பு துறையின் வளர்ச்சிக்கு புதிய ஆற்றலை அளிக்கிறது. பொருளாதாரத்தின் உந்து சக்தியாக உள்கட்டமைப்பு மேம்பாட்டை அரசு கருதுகிறது. இந்த வழியைப் பின்பற்றுவதன் மூலம் 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்கை இந்தியா அடையும்.

    இப்போது இந்த வளர்ச்சியின் வேகத்தை அதிகரித்து, டாப் கியரில் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. சாலைகள், ரெயில் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்க அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×