என் மலர்
இந்தியா
தெலுங்கானாவில் 8 ஆண்டுகளில் 8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை- ஒய்.எஸ். ஷர்மிளா குற்றச்சாட்டு
- மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்யும் விவகாரத்தை சந்திரசேகர ராவ் பேசினார்.
- கடந்த 8 ஆண்டுகளில் 8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெலுங்கானா, போலீசில் ரெய்து ஸ்வராஜ் வேதிகா அறிக்கை தெரிவித்துள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் வெளி மாநில முதல் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
அந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்யும் விவகாரத்தை சந்திரசேகர ராவ் பேசினார்.
இந்த பேச்சை சுட்டிக் காட்டி தெலுங்கானாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது குறித்து ஓய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளா கேள்வி எழுப்பி உள்ளார்.
மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை பற்றி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேசியது நல்லது. அதே போல் தெலுங்கானாவில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்ற கேள்விக்கும் பதில் தர வேண்டும் அல்லவா?
தெலுங்கானாவில் கடந்த 8 ஆண்டுகளில் 8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெலுங்கானா, போலீசில் ரெய்து ஸ்வராஜ் வேதிகா அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த விவசாயிகளின் உயிர்களுக்கு மதிப்பில்லையா?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.