search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சரத் பவார் கட்சியில் பூகம்பம ஏற்பட இருக்கிறது: மகாராஷ்டிரா அமைச்சர் சொல்கிறார்
    X

    சரத் பவார் கட்சியில் பூகம்பம ஏற்பட இருக்கிறது: மகாராஷ்டிரா அமைச்சர் சொல்கிறார்

    • சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக ஜெயந்த் பாட்டீல் உள்ளார்.
    • இவர் அதிருப்தி காரணமாக அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனத் தகவல் வெளியாகி வருகிறது.

    சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதல்வருமான சஞ்சய் ஷிர்சாத், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவரான ஜெயந்த் பாட்டீல் அக்கட்சியில் இருந்து விலகி, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சய் ஷிர்சாத் கூறியதாவது:-

    ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு செல்வார் என்பதை முன்னதாகவே நான் சொல்லியிருக்கிறேன். நீண்ட காலத்திற்கு சரத்பவார் கட்சியில் இருக்க வேண்டும் என்ற மனநிலை அவருக்கு இல்லை. சரத் பவார் கட்சியில் பூகம்பம் ஏற்பட இருக்கிறது. ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைவதை நீங்கள் பார்ப்பீர்கள்.

    இவ்வாறு சஞ்சய் ஷிர்சாத் தெரிவித்துள்ளார்.

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான ஜெயந்த் பாட்டீல், தன்னைப் பற்றி உறுதியாக ஏதும் தெரியவில்லை எனக் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் ஷிர்சாத் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., விஜய் வடேட்டிவார் "ஜெயந்த் பாட்டீல் அதிருப்தியில் இருப்பதால்தான் அவ்வாறு தெரிவித்துள்ளார்" எனத் தெரிவித்ள்ளார். மேலும், "அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை நாம் யூகிக்க மட்டுமே முடியும். அவரது கருத்துக்குப் பின்னால் உள்ள அனுமானம் எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு மூத்த அரசியல்வாதி, எட்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மற்றும் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்" என்றார்.

    சரத் பவாரின் மகளும், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா சுலே "சரத் பவார் எதிரிகளுக்கு மிகப்பெரிய அமைப்பு பலம் இருந்தபோதிலும், ஜெயந்த் பாட்டீல் தேவைப்படுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

    அஜித் பவார் கடந்த 2023-ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்களுடன் கோஷ்டியாக செயல்பட்டு, பின்னர் கட்சியை கைப்பற்றிக் கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

    அஜித் பவார் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றது. சரத் பவார் தலைமையிலான கட்சி 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    Next Story
    ×