search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்: ராகுல் காந்தி
    X

    கேரளாவில் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்: ராகுல் காந்தி

    • கட்சி விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    • காங்கிரசார் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர் என்றார்.

    புதுடெல்லி:

    கேரள மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றிபெற முடியாத காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியாவது வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.

    ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூரின் செயலால் அம்மாநில காங்கிரசார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    சமீபத்தில் ஆளுங்கட்சியை பாராட்டி பேசியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்புடன் சந்திப்பு நடத்தியதற்காக பிரதமர் மோடியையும் பாராட்டியுள்ளார். இதனால் கேரள காங்கிரசார் செய்வதறியாது திகைத்தனர்.

    இதற்கிடையே, சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இதில் வேட்பாளர்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    தலைவர்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக் கூடாது. கட்சி விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மேடையில் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக நிற்பது போன்ற கருப்பு வெள்ளை புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், தங்கள் முன் உள்ள சவாலுக்காக அனைவரும் ஒற்றுமையாக நிற்கின்றனர் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×