என் மலர்
இந்தியா
இந்தியாவுக்கே அச்சுறுத்தல்.. பாஜக அமைச்சரின் வெறுப்பு பேச்சு.. சஷி தரூர் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்
- இந்த நபர் இந்தியாவுக்கே அச்சுறுத்தல், இது போன்ற மூர்க்கத்தனமான வகுப்புவாத பேச்சை அவர் வெளிப்படுத்துவது இது முதல் முறை அல்ல.
- EVM - EVERY VOTE AGAINST MULLAH என்று தெரிவித்தார்
மிண்ண்னு வாகுபதவிவு இயந்திரங்களான இவிஎம் இயந்திரங்களின் விரிவாக்கம், ஒவ்வொரு வாக்கும் முல்லாவுக்கு எதிரானது என்று பொருள் என பாஜகவை சேர்ந்த மகாராஷ்டிர அமைச்சர் நித்தேஷ் ரானே சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை சாங்லியில் இந்து கர்ஜன சபையில் உரையாற்றுகையில் அவர் EVM - EVERY VOTE AGAINST MULLAH என்று தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் இவிஎம் இயந்திரத்தின்மீது சந்தேகம் தெரிவிக்கும் நிலையில் அதை விமர்சிக்கும் விதமாக, இந்துக்கள் ஒன்று திரண்டு வாக்களிப்பதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ரானே பேசினார்.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த திருவனந்தபுர காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர், எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைப்பது தவறானது, அனைவரும் நாட்டின் சமமான குடிமக்கள் என்றும், அதுதான் நாடு முன்னேற ஒரே வழி.
இந்த மாதிரியான விஷயம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நம் நாட்டில், சுதந்திரப் போராட்டத்தின் அடிப்படைப் பாடத்தை நாம் உண்மையில் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இந்தியாவின் சமமான குடிமக்கள், அதுதான் நம் நாட்டிற்கு ஒரே அடிப்படையாக இருக்க முடியும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் பிருந்தா காரத், ரானேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன், ரானேவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது வெறுப்பு பேச்சு, இந்த நபரை கைது செய்ய வேண்டும், இந்த நபர் இந்தியாவுக்கே அச்சுறுத்தல், இது போன்ற மூர்க்கத்தனமான வகுப்புவாத பேச்சை அவர் வெளிப்படுத்துவது இது முதல் முறை அல்ல..
இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்- ன் பாசாங்குத்தனம் .. பிரதமர் அரசியல் சாசனத்தைப் பற்றிப் பேசுகிறார், இங்கு அவரது அமைச்சர் இந்த வெறுப்புப் பேச்சு மூலம் அரசியலமைப்பின் அடிப்படை அடித்தளத்தை அழித்து வருகிறார், எனவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று பிருந்தா காரத் கூறினார்.